பிரித்தானியாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்ததுடன், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும், பொதுச் சொத்தில் ஒழுங்கின்மை ஏற்படுத்தியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் நகரை சேர்ந்த சுகிர்தன் தங்கராசா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
அவர்மீது சவுத்தாம்ப்டனில் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதற்கும், போர்ட்ஸ்மவுத்தில் பொது ஒழுங்கை மீறியதற்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கைய மீதான வழக்கு விசாரணை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அன்று நடைபெறவுள்ளது.



