துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது
மட்டக்குளிய மோதரயில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுவின் தலைவருமான பாலச்சந்திரன் புஷ்பராஜ் எனப்படும் 'புகுடிக்கண்ணாவின் மூன்று நண்பர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவம்

கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் வந்து கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது ஒருவர் உயிரிழந்தார். 'புகுடிக்கண்ணா' குழுவின் வழிகாட்டுதலின் பேரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை

கைது செய்யப்பட்டவர்கள் 25, 29 மற்றும் 37 வயதுடைய கிம்புலா எல, கொட்டாஞ்சேனை
மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam