பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்: செய்திகளின் தொகுப்பு
பாதுகாப்பு படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தகுதி பாராமல் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதுகாப்புப் படையினரின் கடமைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடையூறு விளைவிப்பவர்கள், மோதல்களை ஏற்படுத்துபவர்கள் மற்றும் அவற்றை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையிலுள்ள இராணுவத்தினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் பல்வேறு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri