காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும் நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்க
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என்று ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 156வது வருடாந்த நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
அரசியல் யாப்பு
இலங்கையின் அடிப்படைக் கட்டமைப்பாக அரசியல் யாப்பு உள்ளது. அதனை மீறுவோர் மட்டுமன்றி மீற முயல்வோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கடந்த போராட்டக்காலத்தில் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் மேற்கொண்ட முயற்சி சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமன்றி அரசியலமைப்பை மீறுவதுமாகும்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுமையான தண்டனைக்குட்படுத்த வேண்டும். அரசியலமைப்பை மீற யாருக்கும் இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போராட்டக்காரர்களிடமிருந்து நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியை பாதுகாக்க செயற்பட்ட பொலிஸாருக்கு இதன் போது விசேட விருதுகளும் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி பொலிஸ் விருது
வாழ்நாளில் ஒருதடவை மட்டுமே பெற்றுக் கொள்ளக் கூடிய ஜனாதிபதி பொலிஸ் விருது, கடந்த மே மாதம் இடம்பெற்ற கலவரத்தின் போது போராட்டக்காரர்களிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவைப் பாதுகாப்பதற்காக தன்னுயிரை இழந்த பொலிஸ் சார்ஜண்ட் ஜயந்த குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு! News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
