எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கூடிய ஒரே தலைவர் ரணில்! சாமர சம்பத் பெருமிதம்
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவே.அவரை தவிர யாராலும் இதை ஒன்றிணைத்து கொண்டு செல்ல முடியாது.அதில் நம்பிக்கை கொள்ளவும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா நேற்றையதினம்(20) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
சாமர சம்பத் தசநாயக்க
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடரந்துரையாற்றிய அவர்,
இதையே மனோ கணேசனின் உரையிலும் குறிப்பிட்டார்.பலரும் அதையே குறிப்பிட்டனர்.இந்த அரசாங்கம் நீண்ட காலம் இருக்காது.கையில் எடுத்த சேற்றை வாயில் போட்டுக் கொள்ள முடியாத அரசாங்கம்.
அண்மையில் தேசிய மக்கள் சக்தியில் ரன்ஜன் ஜயலால் 89 ஆம் ஆண்டு காலத்தை ஞாபகப்படுத்தி சண்டித்தனம் காட்டினார்.தம்பி!உங்களை விட சண்டியர் தான் ரணில் விக்ரமசிங்க, அன்று நீங்கள் இருந்திருந்தால்,நடப்பது வேறு.
ஆதலால் ஐ.தே.க -ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணையாமல் எங்களை அழைக்க வேண்டாம்.நாங்கள் வர மாட்டோம். நாங்கள் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்திலும் பேசுகிறோம்,வெளியிலும் பேசுகிறோம்.எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைத்த வேளை,நான் சிறைச்சாலைக்கு வேளியில் நள்ளிரவு முதல்,காலை வரை நின்ற கொண்டிருந்தேன்.நான் மதிக்கும் ஒரு தலைவர்.இன்றும் நான் அவருக்கு மதிப்பளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
