காலி சிறைச்சாலை மேலும் 08 கைதிகளுக்கு மூளைக்காய்ச்சல் : வெளியான காரணம்
காலி சிறைச்சாலையில் மேலும் 08 கைதிகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக தெரிவித்துள்ளார்
இந்நிலையில் குறித்த 08 பேரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் அண்மையில் மரணமடைந்ததைத் தொடர்ந்தே 08 கைதிகளும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி
குறிப்பாக காலி சிறைச்சாலையின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 04 முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகள் அனைவரும் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கைதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதால் அவர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |