நான்கு நாட்களில் இலங்கைக்கு வந்துள்ள பெருமளவான வெளிநாட்டவர்கள்
இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மிக அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர், 5,060 பேர் இவ்வாறு ரஷ்யாவில் இருநுது வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில் 3,333 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்துடன் இந்த வருடம் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
