ஏப்ரலில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைக்க அரசாங்கம் கவனம்
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பால் சிரமத்திற்குள்ளாகும் மக்களுக்கு நிவாரணமாக ஏப்ரல் மாதத்தில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மீதான வரிச்சுமை காரணமாக தேர்தலின் போது ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலையை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மக்களுக்கு நிவாரணம்
மேலும், எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதேவேளை, லங்கா சதொச நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |