இலங்கை கிரிக்கெட் வீரரின் சகோதரருக்கு பாதாள உலகக் குழு கொலை மிரட்டல்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல வீரர் ஒருவரின் சகோதரருக்கு பாதாள உலகக் குழுவினரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மிரட்டல், டுபாயில் பதுங்கியிருக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது நிலவும் கடுமையான உயிர் அச்சுறுத்தலை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட சகோதரருக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த கிரிக்கெட் வீரரின் தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள உலகக் குழுவினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருந்தார்.
அன்றைய தாக்குதலில் குறித்த சகோதரரும் குறிவைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அவர் அச்சமயத்தில் அங்கிருந்து தப்பித்து உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
தற்போது விடுக்கப்பட்டுள்ள புதிய மிரட்டல் தொடர்பாக மூவர் குறித்த தகவல்கள் பெலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri