யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(10.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில், இன்று(11) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று(10.02.2026) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களநிலவரங்களை நேரில் ஆராய்ந்ததுடன் , பொலிஸாரிடமும் தகவல்களை கோரி பெற்றுள்ளனர்.

அதேவேளை, குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும் , உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan