காலி முகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவிலான படையினர்!பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுப்பதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காணொளிகள் பொதுமக்களை திசை திருப்பும் நோக்கில் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

| ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் வெளியான தகவல் |
ஜனாதிபதி மாளிகையில் குவிந்துள்ள மக்கள்
இதேவேளை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன நேற்று முதல் முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில்,பெருமளவிலான மக்கள் ஜனாதிபதி மாளிகையில் தற்போது வரை குவிந்துள்ளதுடன்,தொடர்ந்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.