தமிழர் பகுதியில் மாயமான சிறுவன்.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுவனை கடந்த 29ஆம் திகதி அன்று முதல் காணவில்லை என உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியினை சொந்த முகவரியாக கொண்ட குறித்த சிறுவன், கடந்த புயலுக்கு முன்னர் கருநாட்டுக்கேணி பகுதியில் தயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தொடர்பு கொள்ளுங்கள்..
இதற்கிடையில், கடந்த 28.11.2025ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான நாயாற்று பாலம் ஊடாக போக்குவரத்து பாலம் உடைவினால் இன்றுவரை தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிறுவன், காணாமல் போனமை தொடர்பில் எந்த தகவலும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உறவினர்கள் இருந்துள்ளார்கள்.
அதனைதொடர்ந்து, இது தொடர்பில் உறவினர்களினால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த சிறுவனை காண்பவர்கள் உடனடியாக 768459796 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிய கடற்றொழில் அமைச்சர் - சபாகுகதாஸ் குற்றச்சாட்டு!


அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam