ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கிருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மீட்கப்பட்ட 17,850,000 ரூபா பணம் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதுடன்,பணம் தொடர்பில் நாளை 11 மணிக்கு நீதிமன்றில் அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான பணம் தொடர்பில் வெளியான தகவல்
நேற்று மாலை ஜனாதிபதி மாளிகைக்குள் பணம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு வழங்கிய பணிப்புரைக்கு அமைய கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி அதிகாரிகள் குழுவுடன் சென்று பணத்தைபெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை,அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் ளெியாகியுள்ளன.