உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பிரதிவாதிகளினுடைய வாக்குமூலத்தில் வெளியான தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
நேற்றையதினம்(19) பிரதிவாதிகள் தற்காப்பு வாக்குமூலங்களை வழங்கினர்.இந்தநிலையிலே, நெளபர் மெளலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் இதுவரையில் சாட்சியல் அளித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தங்களை தாக்கி கட்டாய வாக்குமூலம் பெற முயன்றதாகவும், சஹ்ரானுடன் தொடர்பு இல்லை என்றும் சில பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் முக்கிய சாட்சியான முரளியின் சாட்சியம் இன்று பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.