ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் ஜூலை 4-ஆம் திகதி தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 அன்று அவருடைய சொந்த ஊரான மஷ்ஹாத் (Mashhad) புனித நகரில் உடல் அடக்கத்துடன் நிறைவடையும் என்று ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலின் முதல் நாளிலேயே கமேனி கொல்லப்பட்டார்.
அலி கமேனியின் இறுதிச்சடங்கு
86 வயதான அவர், ஈரானை சுமார் 36 ஆண்டுகள் வழிநடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய சட்டப்படி இறந்தவர்களின் உடலை 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும், போர் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவரது மருமகளும் கொல்லப்பட்டார்.
அந்த தாக்குதலில் காயமடைந்த கமேனியின் 56 வயது மகன் மொஜ்தபா (Mojtaba) தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், ஜூலை 4-ல் தொடங்கும் இறுதிச்சடங்கு ஊர்வலம், ஜூலை 7 அன்று தெற்கு தெஹ்ரானில் உள்ள கோம் (Qom) புனித நகரைக் கடந்து, இறுதியாக ஜூலை 9 அன்று மஷ்ஹாத் நகரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam