போரில் வெற்றி பெற்றது ஈரான்தான் – அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம்..! உலக அரசியலில் பெரும் பரபரப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் சாத்தியமான புதிய ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போரில் வெற்றி பெற்றது ஈரான்தான் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
வெளியான தகவல்களின்படி, அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை
அதன்படி, லெபனானையும் உள்ளடக்கி அனைத்து முனைகளிலும் நடைபெற்று வரும் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இணக்கம் எட்டப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
🚨 BREAKING:
— Iran Force (@IranArmystan_) June 13, 2026
🇺🇸🇮🇷 IRAN'S FOREING MINISTER ARAGHCHI JUST SAID THAT IRAN IS THE WINNER OF THE WAR
THE POSSIBLE DEAL WITH THE U.S. INCLUDES:
- END TO THE WAR ON ALL FRONTS, INCLUDING LEBANON
- ENDING THE U.S. BLOCKADE AND REOPENING THE STRAIT OF HORMUZ
- NUCLEAR ISSUES WILL BE… pic.twitter.com/WSUtt6vWNH
மேலும், அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்குவதுடன், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேவேளை, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரங்கள் உடனடியாக அல்லாமல், பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தை கட்டங்களில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இத்துடன், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்பதும் சாத்தியமான ஒப்பந்த நிபந்தனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த தகவல்கள் குறித்து அமெரிக்கா அல்லது ஈரான் அரசாங்கங்கள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனால், வெளியாகியுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் குறித்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam