புதுக்குடியிருப்பில் சிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு எரிபொருள் அனுமதி கடிதங்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளின் சிறுபோக நெற்செய்கைக்காக இருப்பில் உள்ள உரங்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சுஜீவறூபன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கமநல சேவைத்திணைக்களத்தில் உள்ள இருப்பில் தற்போது விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கருக்கும் கறைவான விவசாயிகளுக்கு 25 கிலோகிராம் யூரியாவும், இரண்டு ஏக்கருக்கு அதிமான விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் யூரியாவும் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான பசளைகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பை யூரியாக்களை திணைக்களம் கோரியுள்ளது.
அனுமதி கடிதங்கள் வழங்கல்
விவசாயிகள் தற்போது எரிபொருள் பிரச்சினையில் எரிபொருள் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டுள்ளதை கருத்தில் கொண்டு விவசாய செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு 20 லீற்றர் டீசலினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளகூடியவாறு அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கைக்காக 1148 விவசாயிகள் 2435 ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் சிறுபோகத்திற்கான நிலம் பண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam