இன்று முதல் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் விநியோகம்
எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிலையங்களுக்கு நேற்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
விசாக பூரணை தினம், விடுமுறை தினம் என்பதால் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்றைய தினம் எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும்.
மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப் பெறும்.
ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகம் இல்லை |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்.. Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
