வெனிசுவேலாவின் முதல் பெண் ஜனாதிபதியாவேன்: மரியா கொரினா மச்சாடோ உறுதி
சரியான நேரம் வரும்போது வெனிசுவேலாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நான் நாட்டை வழிநடத்துவேன் என எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வொஷிங்டனில் சந்தித்த அவர், வெனிசுவேலாவின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றியாகத் தனது நோபல் அமைதிப் பரிசுக்குரிய பதக்கத்தை அவருக்குப் பரிசாக வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இடைக்கால ஜனாதிபதியாக இருக்கும் டெல்சி ரோட்ரிக்ஸுடன் ட்ரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மச்சாடோ உறுதி
மச்சாடோவிற்குப் போதிய உள்நாட்டு ஆதரவு இல்லை என ட்ரம்ப் கருதுவதால், அவரை ஜனாதிபதியாக ஏற்க இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இருப்பினும், தமக்கே மக்கள் ஆணை இருப்பதாக மச்சாடோ உறுதியுடன் தெரிவித்துள்ளார்.