அமெரிக்காவுக்கு போட்டியாக புதிய ஏவுகணையை களமிறக்கியுள்ள பிரான்ஸ்
அமெரிக்காவின் Patriot Surface-to-Air Missile (SAM) பாதுகாப்பு அமைப்பை போட்டியிடும் வகையில் பிரான்ஸ், புதிய SAMP/T NG ஏவுகணையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் பல ஆண்டுகளாக உலகின் ஏவுகணை பாதுகாப்பு துறையில் முன்னணியில் இருந்த அமெரிக்கா, தற்போது ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
போர் விமானங்கள்
இந்த ஏவுகணை அமைப்பு Thales மற்றும் MBDA நிறுவனங்கள் இணைந்து, இத்தாலியுடன் கூட்டுசேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது, F-35 போர் விமானத்திற்கு எதிராக Rafale விமானத்தை முன்வைத்தது போல், இப்போது பைட்ரியட் அமைப்புக்கு நேரடி போட்டியாக உள்ளதாக கருதப்படுகிறது.
SAMP/T NG ஏவுகணை அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், மற்றும் போர் விமானங்களை மிகச் சிறந்த துல்லியத்துடன் தடுக்கவல்லது ன கூறப்பட்டுள்ளது.
Patriot ஏவுகணை
இதன் தீவிரமான செயல்திறன், விரைவான பிரயோகமுடிவு, மற்றும் முன்னேற்றமான ரேடார் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள், நேட்டோ நாடுகள் உள்ளிட்ட பலரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Patriot ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




