ட்ரம்பால் பிரித்தானியாவுக்கு சென்று விட்டேன்.. எலன் டிஜெனெரஸ் பகிரங்கம்
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான எலன் டிஜெனெரஸ், பிரித்தானியாவுக்கு சென்ற பிறகு முதல் முறையாகப் பொதுவில் தோன்றியுள்ளார்.
இதன்போது, டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாளே பிரித்தானியாவில் குடியேற முடிவு செய்ததாகக் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகரும் தொகுப்பாளருமான அவர், குளோஸ்டர்ஷையரின் செல்டென்ஹாமில் ஒரு கூட்டத்தில், பிரித்தானியாவில் வாழ்க்கை "இன்னும் சிறப்பாக உள்ளது" என்று தெரிவித்துள்ளர்.
டீவி நிகழ்ச்சியிலிருந்து நீக்கம்..
அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை திருமண உரிமையை மாற்றியமைக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, தானும் தனது மனைவி போர்டியா டி ரோஸியும் பிரித்தானியாவில் மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் தனது நீண்டகாலமாக அவர் நடாத்தி வந்த அரட்டை நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் வழிவகுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எலன், 30 ஆண்டுகளாக அமெரிக்க தொலைக்காட்சி பிரபலங்களில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார், அவரது பகல்நேர அரட்டை நிகழ்ச்சி மற்றும் 1990களின் சுய-தலைப்பு நகைச்சுவை மூலம், ஓஸ்கார், கிராமி மற்றும் எம்மி விருதுகளை தொகுத்து வழங்கியதற்காகவும், ஃபைண்டிங் நெமோ கார்டூன் படத்தில் டோரிக்கு குரல் கொடுத்ததற்காகவும் பிரபலமானவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri

டொனால்ட் டிரம்ப்பிற்கு இருக்கும் ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு உங்களுக்கு வருவதை எப்படி தடுக்கலாம்? Manithan
