பல வருடங்களுக்கு முன்னர் நடந்த ட்ரம்ப் தொடர்பான சர்ச்சை! பிரபல பத்திரிகை மீது வழக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை மற்றும் ரூபர்ட் முர்டோக் உள்ளிட்ட அதன் உரிமையாளர்கள் மீது குறைந்தது 10 பில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாலியல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட, நிதியாளர்- ஜெஃப்ரி எப்ஸ்டீனின், 2003ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், ட்ரம்ப்பின் பெயர் பாலியல் ரீதியாகத் தூண்டும் ஓவியம் மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்ட இரகசியங்கள் இருந்ததாக, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
எனினும், இது போலியான செய்தி என்று தெரிவித்தே, ட்ரம்ப் தமது வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
நற்பெயருக்கு தீங்கு
மியாமி கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரொபர்ட் தோம்சன் மற்றும் இரண்டு செய்தியாளர்கள் உட்பட்ட பலர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் தம்மை அவதூறு செய்ததாகவும், தமக்கு மிகப்பெரிய நிதி மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னதாக, எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததில் அவரது பங்கு தொடர்பான ஐந்து கூட்டாட்சி குற்றச்சாட்டுகளில் 2021இல் தண்டிக்கப்பட்டார்.
இந்த நிலையில், எப்ஸ்டீன், 2019இல் நியூ யோர்க் சிறைச்சாலையில் தனது உயிரை தானே மாய்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
