பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கை தமிழன் - மக்ரேனுக்கு பாண் வழங்கும் தர்ஷன்
பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (baguette) தயாரிக்கும் போட்டியில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.
உலகின் மிக பிரபல உணவுகளில் ஒன்றான பிரெஞ்சுப் பாண் உள்ளது. இந்தப் போட்டியில், வெற்றியாளராக தர்ஷன் செல்வராஜா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் பாரிஸில் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவ்வாண்டுக்கான வெற்றியாளர்
இந்நிலையில் பிரெஞ்சு பாரம்பரிய சுவையான பாண் தயாரித்து இவ்வாண்டுக்கான வெற்றியாளராக மாறியுள்ளார்.
126 போட்டியாளர்களில் தர்ஷன் செல்வராஜா வெற்றிபெற்றுள்ளார். வெற்றிப் பரிசாக 4000 யூரோ வழங்கப்படவுள்ளது.
அத்துடன் பிரான்ஸின் ஜனாதிபதி மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பாண் வழங்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்துள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW