நாவலபிட்டியில் நடந்த சோகச்சம்பவம் - மரம் முறிந்து விழுந்ததில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி
நாவலப்பிட்டிய பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(12.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி
நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய மரம் விழுந்த பிறகு, மரத்தில் சிக்கிக்கொண்ட காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக இயற்கையால் ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam