பாலச்சந்திரனின் மரணம் : நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய ஆளும்கட்சி எம்.பி
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி கேள்வி எழுப்பியமை குறித்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கருத்துக்கு இன்று(12.05.2026) பதில் வழங்கும் விதமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மரணத்தின்போது ஆட்சியில் இருந்தவர்கள்
மேலும் கருத்து தெரிவிக்கையில். இறுதி யுத்தத்தின் போது யார் ஆட்சியில் இருந்தனர்? என்றும், இந்த கொலைக்கு உண்மையில் பொறுப்புகூற வேண்டியவர்கள் யார்? எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தியே இந்த கருத்தை முன்வைத்தார்.

இந்த மரணத்தின்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார், பொறுப்புகூறவேண்டியவர்கள் யார்?, அன்று இன்றுள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சியில் இருந்தோமா?
ஏன் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகன் பாலச்சந்திரனை ஆட்சியில் இருந்தவர்களும் நாடாளுமன்றில் இருந்தவர்களும் காப்பாற்ற முன்வரவில்லை?
இந்த விடயங்களை அறிந்து குழப்புவதற்காக இவ்வாறான கருத்துக்களை ஹக்கீம் முன்வைக்கின்றார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின் முக்கிய சாட்சியாளரான அசாத் மௌலானாவின் கருத்துக்களை பொய் என்று கூறுகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam