ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை! பயணத் தடை விதிப்பு..
முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை, பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷான் விஜயலால் டி சில்வா இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிணையில் செல்ல அனுமதி
இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேக நபரை தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களின் கீழ் வெளிச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், சந்தேக நபர் வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதவான், அவரது வெளிநாட்டுக் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan