சிறுவன் ஒருவனைத் தாக்கிய குற்றச்சாட்டு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது
சிறுவனொருவனைக் கொடூரமாகத் தாக்கும் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியின் அடிப்படையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பகுதியில் நடந்த சொத்துத் திருட்டு வழக்கில் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்ட சிறுவன் ஒருவனைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் குறித்த செய்தி சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
சொத்து திருட்டுச் சம்பவம்
காலி பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சொத்துத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக சந்தேக நபரை கொடூரமாகத் தாக்கியதாக அவரது தாய் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
47 வயதுப் பெண், அவரது கணவர், அவர்களது 17 வயது மகள் மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (04) காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan