கிளிநொச்சியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் இளைஞன் கைதான விவகாரம் : நாமல் எழுப்பிய கேள்வி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்த கடுமையான கவலைகளை மீண்டும் எழுப்புகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரு ராப் பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளம் கலைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குறித்த தொடர்பான பாடல்களைப் பயன்படுத்தி
இசையும் கலை வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களாகக் கருதப்படும் நிலையில், சமீபத்திய உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது NPP அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பயன்படுத்திப் பகிர்ந்தபோது ஏன் இதே தரநிலைகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
The selective use of the Prevention of Terrorism Act once again raises serious concerns about double standards under the current government.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 4, 2026
We are hearing reports that a young artist from Kilinochchi has been arrested and remanded under the PTA over the alleged use of… pic.twitter.com/9iqQiqHhOE
யாழ்ப்பாண மாவட்ட NPP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற பாடல்களை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பொலிஸ் எங்கே இருந்தது? அப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எங்கே இருந்தது?
சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே நீடிக்கின்றனர், மேலும் விடுதலைப் புலிகளின் கூறுகளை ஊக்குவிப்பதையோ அல்லது மகிமைப்படுத்துவதையோ நாங்கள் ஆதரிப்பதில்லை.
ஒருதலைபட்சமான அதிகார துஷ்பிரயோகம்
இருப்பினும், ஒரு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு இளம் கலைஞர் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான நடத்தைக்காகக் குற்றம் சாட்டப்படும்போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டு, மற்றொருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது தவறாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வசதிக்காக சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.
அரசியல்வாதிகளுக்கு ஒரு விதியும், சாதாரண இளைஞர்களுக்கு மற்றொரு விதியும் ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று அரசாங்கம் நம்பினால், அரசியல் சார்பு பேதமின்றி அனைவருக்கும் பொறுப்புக்கூறல் சமமாகப் பொருந்த வேண்டும்.
இல்லையெனில், இந்தக் கைது ஒருதலைபட்சமான அதிகார துஷ்பிரயோகமாகக் கருதப்படும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri