கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Crime Branch Criminal Investigation Department
By Dhayani Jun 04, 2026 07:54 AM GMT
Report

பேலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் 19 உள்ளூர் கைத்துப்பாக்கிகள், பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மாணவன் - பெண்கள் உட்பட மூவர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மாணவன் - பெண்கள் உட்பட மூவர் பலி

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கிடங்கு

நேற்று (03) காலை சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன், இந்த ஆயுதங்களுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு இலட்சம் போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார் | Secrets Revealed From Dematagoda Armory

இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் செவனகல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தெமட்டகொட பகுதியில் சில காலமாகத் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த கைத்துப்பாக்கிகள் வேறு இடத்தில் தயாரிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு, தெமட்டகொடவில் உள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒரு இரகசிய பதுங்குமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த ஆயுதங்களும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்ட நேரத்தில், அந்த வீட்டில் இருந்த ஒரு இளம் தம்பதியினர் பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளனர்.

இளம் தம்பதியினர் தலைமறைவு 

இளம் தம்பதியினர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பேலியகொட குற்றப் பிரிவுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார் | Secrets Revealed From Dematagoda Armory

இதன்போது கைப்பற்றப்பட்ட 19 உள்நாட்டுத்தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் நல்ல நிலையில் இருந்ததாகவும், அவை டி-56 ரக தோட்டாக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்றும் பொலிஸ் கூறுகின்றது.

தற்போது வெலிசர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் தெமட்டகொட சமிந்தவின் மகனுடன் இவை தொடர்புடையவை என்றும், சமிந்தவின் மகன் துபாயில் தங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதாள உலகக்கும்பலுடன் தொடர்பு

இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அவர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டு, விரிவாக விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சிறப்பு அதிரடிப் படையும் பொலிஸாருக்கு உதவியுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பில் இவ்வளவு பெரிய அளவிலான துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என பொலிஸ் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மேற்கு வடக்கு பொறுப்பு பிரதி பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தல்களின் பேரில், பேலியகொட குற்றப் பிரிவுப்பணிப்பாளர் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

டொலருக்கு எதிராக ரூபாவின் தொடர் சரிவு! மருந்துப் பொருட்களின் விலைகளில் கடும் தாக்கம்..

டொலருக்கு எதிராக ரூபாவின் தொடர் சரிவு! மருந்துப் பொருட்களின் விலைகளில் கடும் தாக்கம்..

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US