டொலருக்கு எதிராக ரூபாவின் தொடர் சரிவு! மருந்துப் பொருட்களின் விலைகளில் கடும் தாக்கம்..
சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு பரீசிலித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால், மருந்துகளின் விலையை உயர்த்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபையின் தலைவரும், விசேடமருத்துவ நிபுணருமான மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம, இது தொடர்பான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து விலைகளும் உயரக்கூடும்
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளின் விலையை உயர்த்துவதற்குத் தேவையான ஆரம்பகட்டப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட 60 மருந்து வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும், “டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும் என்பது நமக்குத் தெரியும். அதற்கேற்ப, மருந்து விலைகளும் உயரக்கூடும்.
நாங்கள் இதை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களிடம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் உள்ளன.
எல்லா மருந்துகளின் விலைகளும் உயரப்போவதில்லை. ஆனால் சில மருந்துகளின் விலைகள் உயரும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan