கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து! நான்கு பேர் காயம்
கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.9.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்றிரவு எட்டு மணியளவில் கனரக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறினார்.
மேலதிக விசாரணை
இதன்போது பணியாளருடன் முரண்பட்டு சென்ற கனரக வாகன சாரதி சிறிது நேரத்தின் பின்பு ஐந்து பேருடன் வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர், வாடிக்கையாளர் மீது கத்தி குத்து மற்றும் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.