மட்டு போதனா வைத்தியசாலையில் மருத்துவத்துறை வரலாற்றில் அரிதான சம்பவம்
மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கிருஸ்ணவேணி எனும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவித்த தாய்
இதன்போது, சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு ஒரு கருவில் நான்கு குழந்தைகள் பிறப்பது 5 இலட்சத்து 70ஆயிரம் பெண்களில் ஒருவருக்கு இடம்பெறுவதாகவும் அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயம் சாத்தியமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கு நான்கு பிள்ளைகளை பிரசவித்த தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
