மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது.
இந்த தேர்த்திருவிழா நேற்று (21) காலை இடம்பெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி ,வெளி வீதி உலா வந்தனர்.
அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேரில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி இடம் பெற்றது.
தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு,தேரில் பச்சை சாத்தப் பட்டதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் ஆலயத்தில் எழுந்தருளினார்கள்.
இதேவேளை நேற்றையதினம் தீர்த்த உற்சவம் இடம் பெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam