கனடாவின் பொருளாதாரத்திற்கு பாரிய சவாலாக மாறியுள்ள போர்ட் மெக்முரே காட்டுத் தீ
கனடாவில்(Canada) பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியான போர்ட் மெக்முரே பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த பகுதியை சுற்றியுள்ள 6000 மக்கள் தற்போது வரையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வரட்சி மற்றும் பலத்த காற்றினால் கனடா - ஆல்பர்ட்டாவின் மேற்கு மாகாணத்தில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீயானது தீவிரமடைந்துள்ளது.
காட்டுத் தீ தீவிரம்
தற்போது காட்டுத் தீ தென்மேற்கே சுமார் 13 கிலோ மீற்றர் (8 மைல்) தொலைவில் உள்ளது. அங்கு மணிக்கு 40 கிலோ மீற்றர் (24.8 மைல்) வேகத்தில் காற்று வீசுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளதால் வானம் புகையால் சூழப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு வீரர்கள் தீ பரவும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் 10,000 ஹெக்டயர் பரப்பிலான வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில், போர்ட் மெக்முரேயில் பரவி பாரிய காட்டுத்தீயினால் 90,000 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி இருந்தனர்.
இந்நிலையில் போர்ட் மெக்முரே பகுதியானது ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி இடம்பெறும் நகரமாக கருதப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
