சிங்கப்பூரின் புதிய பிரதமராக லோரன்ஸ் வோங் பதவியேற்றார்
சிங்கப்பூரின் துணைப் பிரதமர் லோரன்ஸ் வோங்(Lawrence Wong) சிங்கப்பூரின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அவர் இன்று(15.05.2024) இஸ்தானா புல்வெளியில் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுடன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பிரதமர் லீ சியென் லூங் தனது பதவி விலகல் செய்ததை அடுத்தே லோரன்ஸ் வோங் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிரதமரின் அமைச்சரவை
இந்தநிலையில் புதிய பிரதமரின் அமைச்சரவையில் பதவி விலகிய முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் நீண்ட காலம் பிரதமராக இருந்த லீ சியென் லூங் பதவி விலகியமையானது, தீவு தேசத்தின் லீ பரம்பரை அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு, லீ தனது துணைப் பிரதமரிடம் இன்று முறைப்படி ஆட்சியை ஒப்படைத்துள்ளார்.
1965 இல் ஒரு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூரில் மூன்று பிரதமர்கள் மட்டுமே ஆட்சியை நடத்தியுள்ளதோடு அவர்கள் அனைவரும் ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர்களாவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |