மும்பையிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் இருபத்தி ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த நபரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
கொழும்பு -13 பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (15 ஆம் திகதி) காலை வந்தடைந்துள்ளார்.
முன்னெடுக்கப்பட்ட சோதனை
இதன்போது, முன்னெடுக்கப்பட்ட சோதனையின் பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 21,000 சிகரெட்டுகள் அடங்கிய 105 அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan