மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்
மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்து சாரதி ஒருவர் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (15.05.2024) இடம்பெற்றுள்ளது.
பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து தரித்து நின்றபோது பின்னால் வந்த அரச பேருந்து சாரதி பஸ்தரிப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக அங்கு தரித்து நின்ற தனியார் பேருந்தின் சாரதியை பேருந்தினை சற்று முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனியார் பேருந்து சாரதி கோபமடைந்து அரச பேருந்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இருவரும் காயமடைந்துள்ளனர்.
பின்னர் தனியார் பேருந்து சாரதி பேருந்துடன் தப்பி சென்றதுடன் இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தனியார் பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan