கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் கட்டாரிலிருந்து இலங்கை வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
இரட்டைக்கொலைச் சம்பவம்
கடந்த 2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட, குறித்த சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின் பிணையில் விடுதலையான அவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளிநாடு தப்பிச் சென்றிருந்தார்.
சர்வதேச சிவப்பு பிடியாணை
இதன் காரணமாக அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan