இனி பயம் வேண்டாம்! நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம்..
இலங்கை பொலிஸாரினால் பொதுமக்கள் முறைப்பாடுகளை நேரடியாக பொலிஸ்துறை மா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” செயற்திட்டம், 2026 ஆம் ஆண்டில் மேலும் வலுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
டிஜிட்டல் புரட்சி
பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல், ஊழல் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

போக்குவரத்து விதிமீறல்கள், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் பொதுவான குற்றங்கள் குறித்தும் முறைப்பாடு செய்யலாம். முறைப்பாடு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பிரிவு குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்.
உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். உங்களது முறைப்பாட்டிற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில், அதே சேவையைப் பயன்படுத்தி மீண்டும்பொலிஸ் மா அதிபருக்கு அறியத்தர முடியும்.
மேலும் பொதுமக்கள் பின்வரும் டிஜிட்டல் தளங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளலாம் உத்தியோகபூர்வ இணையதளம் - www.police.lk (e-services ஊடாக) நேரடி இணைய நுழைவாயில் - https://telligp.police.lk மின்னஞ்சல் - telligp@police.gov.lk
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri