பிரித்தானிய நகரமொன்றில் தீவிரமாகப் பரவும் நோய்: நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) நகரமொன்றில், திடீரென பரவிய நோய் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய இராச்சியத்தின் பிரிக்ஸ்ஹாம் (Brixham) என்னும் நகரிலுள்ள நூற்றுக்கணக்கானோருக்கு இரண்டு வாரங்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
தீவிர நோய்ப் பரவல்
குறித்த நகரத்தில் காணப்படும் தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலுள்ளவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் தாக்கத்திற்கு உள்ளான பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்ப் பரவல், கிரிப்டோஸ்போரிடியம் (cryptosporidium) என்னும் நோய்க்கிருமியால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு அது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த கிரிப்டோஸ்போரிடியம் (cryptosporidium) என்னும் நோய்க்கிருமி, பாதிக்கப்பட்ட நீரில் நீந்துவதன் மூலமும், நோய்க்கிருமி கலந்த நீரைக் குடிப்பதன் மூலமும் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த நோய் தாக்கமானது உணவின் மூலமும் பரவக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |