கனடாவின் மாகாணமொன்றில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக புதிய தீர்மானம்
கனடாவின்(Canada) பிரின்சஸ் எட்வர்ட் மாகாணம், வெளிநாட்டவர்களுக்கெதிராக மேற்கொள்ளவுள்ள தீர்மானம் தொடர்பில் அந்த மாகாணத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில், மாகாண ''நாமினி'' திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மாகாண அரசு
மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.
மருத்துவத் துறையில் பணியாற்றுவோர் மற்றும் கட்டுமானப் பணி செய்வோர் போன்ற சில துறையினருக்கு மட்டுமே நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாகாண அரசின் இந்த முடிவை எதிர்த்து தலைநகர் Charlottetownஇல் புலம்பெயர்ந்தோர் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |