முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் மேலும் தீவிரம்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோய் அவரது எலும்புகளையும் தாண்டி மேலும் பரவியுள்ளதாகவும், அவர் கடுமையான வலியை அனுபவித்து வருவதாகவும் அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
புற்றுநோய் தீவிரம்
நோய் பரவியதன் காரணமாக அவர் பல்வேறு வகைகளில் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக ஹண்டர் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
83 வயதான ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அது எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக கடந்த 2025 மே மாதம் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹோர்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.
எனினும், ஹண்டர் பைடனின் இந்த நேர்காணல் குறித்து கருத்து தெரிவிக்க ஜோ பைடனின் ஊடகப் பேச்சாளர் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam