கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை
கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.
குறித்த வான்கதவுகள் இன்று (09.08.2026) மாலை 7.00 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
வான் கதவுகள் திறப்பு
இந்த வான்கதவுகளின் ஊடாக வினாடிக்கு சுமார் 20 கன மீட்டர் என்ற விகிதத்தில் கொத்மலை ஓயாவின் உபரி நீர் வெளியேற்றப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாடுகள் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையின் விளைவாக, கொத்மலை ஓயா மற்றும் நீர்த்தேக்கத்திற்குக் கீழ் உள்ள மகாவலி ஆற்றின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு அதிகார சபைகள் கேட்டுக்கொண்டுள்ளன.