ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி பொதுமக்கள் கையெழுத்து சேகரிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி, பொதுமக்கள் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை
ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், ஜனாதிபதி பொதுமன்னிப்பை அடுத்து ஏழே மாதங்களில் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்துச் செய்தது.

அத்துடன் அவரது தண்டனைக் காலத்தின் எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை கழிக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டது.
குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் ஞானசார தேரர் இதுவரை சிறைச்சாலைக்கு அனுப்பப்படவிலலை. அதற்குப் பதிலாக தற்போது ஜனாதிபதி அநுரகுமார மூலமாக ஜனாதிபதி பொதுமன்னிப்பொன்றைப் பெற்றுக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
அதற்ககான பொதுமக்கள் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கைகள் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!