முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் சந்திரானி பண்டார மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019.01.14 மற்றும் 2019.01.31-க்கு இடையில், அரசாங்க விதிகளுக்குப் புறம்பாக சந்திரவன்ச என்பவரை உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் கருத்திட்டப் பணிப்பாளராக நியமித்து, மேலும் தனக்கு நெருக்கமான சிலரை சட்டவிரோதமாக பல்வேறு பதவிகளில் நியமிப்பதற்கு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 'ஊழல்' குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு இந்த குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்திருந்தது.
சுரேஷ் சாலேவிற்காக வெடித்துள்ள போராட்டம்! குவியும் அரசியல்வாதிகள் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள்
முன்னாள் அமைச்சர் சந்திரானி பண்டார மீது இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (08) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நடைபெற்றது.
இவ்வழக்கில் பிரதிவாதியின் சார்பில் ஒரு சாட்சியிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சிய விசாரணையை ஜூலை 09 வரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சுரேஷ் சாலே..! தயார்நிலையில் மருத்துவ அறிக்கை
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan