எரிபொருள் முறைகேட்டில் சிக்கிய முன்னாள் ஆளுநர் - இழப்பீடு வழங்க உடனடி உத்தரவு
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹீபால ஹேரத், முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 11,320 லீற்றர் எரிபொருளுக்கான 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவைச் செலுத்தியுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வில், எரிபொருள் பயன்பாடு சுற்றறிக்கை விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த தொகையை மீள அறவிடுமாறு மாகாண சபைக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்னாள் ஆளுநருக்கு எதிராக நடக்கும் முறைகேடுகள்
இதன்படி, முன்னாள் ஆளுநர் குறித்த தொகையை பணமாகச் செலுத்தியுள்ளதாக வடமத்திய மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் அருண ரவி தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஓய்வுபெற்றுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this video