கோட்டாபயவின் மோசடிகள் தொடர்பில் வெளிவரும் பரபரப்புத் தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு நெருங்கிய தொழிலதிபர்களுக்கு பெருமளவில் கடன் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு கடும் அச்சுறுத்தல் கொடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கோட்டாபயவின் மோசடிகள்
அதற்கமைய அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டாபய குற்றமற்றவர் என்ற வகையில் நாட்டு மக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கை ஒன்றும் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கோட்டாபய நீதிமன்றத்திற்கு வருவது மற்றும் செல்வது தொடர்பில் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையிலான சிறப்பு பரப்புரைகள், ராஜபக்சர்களுக்கு ஆதரவான குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அச்சுறுத்தல்களின் அடிப்படையில், பல்வேறு கட்டத்தில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அரசாங்கத்திடமிருந்து பெருந்தொகை பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூ. 4000 கோடி பட்ஜெட் ராமாயணா படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்... கணிக்கப்பட்ட விவரம் Cineulagam
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan