இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்
பேருவளை மொரகல்ல கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ருமேனிய நாட்டை சேர்ந்த 71 வயதான ஒருவரே இன்று புதன்கிழமை (7) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
நீரில் மூழ்கிய வெளிநாட்டவரை கரைக்கு கொண்டு சென்று பேருவளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரண விசாரணைக்காக களுத்துறை - நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam