பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – பலர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் இன்று (07.2.2024) பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குண்டு வெடிப்பில் பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் வேட்பாளரின் அலுவலகம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை தேர்தல் வேட்பாளரின் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவித்த நாளில் இருந்து குண்டு வெடிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதுடன் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri