பிள்ளைகளை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தை கைது
இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி அதனை காணொளியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தை சேர்ந்த நபரே இன்று (07.2.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேக நபரின் மனைவி
09 மற்றும் 05 வயதுடைய இரண்டு பிள்ளைகள் மீது 33 வயதுடைய சந்தேகநபரான தந்தை கடந்த 5ஆம் திகதி இரவு தாக்குதல் நடத்தியுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி பணி பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு குழந்தைகளும் பாட்டியின் பராமரிப்பில் உள்ளதாகவும், சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள வாகனம் சுத்தம் செய்யும் நிலையத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
இரண்டு பிள்ளைகளும் தந்தையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத காரணத்தினால் சந்தேகத்திற்குரிய தந்தையினால் தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இரண்டு பிள்ளைகளுடன் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் இரண்டு குழந்தைகளையும் பொறுப்பேற்று டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
